இந்த சீஸ் காஸடியா ரொம்ப நல்லா இருந்தது.. மைதா மாவில் சிறிய சப்பாத்தி போல இட்டு அதில் நடுவில் சீஸை வைத்து அழுத்தம் கொடுக்கிறார்கள். எங்க போனாலும் குட்டிப்பையனுக்கு அது இருந்தால் போதும்.
அடுத்து cape may கேப் மே நோக்கிப் புறப்பட்டோம். அந்த ஊரில் எல்லா வீடுகளும் அவ்வளவு அழகு. பழமையான விக்டோரியன் மாடல் வீடுகள் என்று அவற்றை அழைக்கிறார்கள். வண்ணமயமான வீடுகள்.
சிலபழமையான வீடுகளை அப்படியே தங்கும் விடுதிகளாக செய்து பராமரிக்கிறார்கள். திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்துதருகிறார்கள். விக்டோரியன் வீடுகளில் , அழகான கடற்கரையில் திருமணங்கள் செய்துகொள்வது என்றே ஆர்வமாய் சிலர் வருகிறார்கள்.
பொதுவாக அமெரிக்கா முழுவதுமே எல்லார் வீட்டு முகப்பிலும் அந்நாட்டுக்கொடி ஒன்று சாய்ந்தபடி பறந்துகொண்டிருக்கிறது. நம்ம எல்லாம் நேராத்தான் நிறுத்துவோம்ன்னு..நிறுத்திய கம்பத்தில் காற்றில்லாம கொடி சுருங்கிக் கிடக்கவிடுகிறோம். . கம்பத்தை சாஞ்சாப்பல சொருகிவச்சிட்டு கொடியை முழுக்கத் தெரியும்படி பறக்கவிடறாங்க..:)
(photo : thanks Steve and liza)
நியூஜெர்ஸி மாநிலத்தின் தெற்கு முனையில் இந்த லைட் ஹவுஸ் இருக்கிறது. இந்த இடம் படக்காட்சியாக ஓவியமாக அதிகமாக வெளிவந்திருக்கிறதாம். நீங்க பார்த்திருக்கீங்களா?
முதல் முறை கட்டப்பட்ட கலங்கரைவிளக்கத்தை கடலே சாப்பிட்டுவிட்டதாம். இரண்டாம் முறை சரியில்லாததால் உடைந்துபோய்விட்டதாம். இப்போது இரண்டு சுவர்களாக மிக அதிகமான பாதுகாப்புடன் கட்டப்பட்டு ,தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் கலங்கரை விளக்கத்தில் ஒன்றாக இருக்கின்றது.( தானியங்கி)
ஜன்னல் வழி காட்சி. வெளிப்புறச்சுவரின் பரிமாணம் தெரிகிறதா?
199 இரும்புப்படிகள் . மேலே ஏறியபின் அங்கிருந்து அழகான காட்சி. கம்பிகள் இட்டிருந்தாலும் என்னவோ அந்த இரும்பு மேடையின் ஓரமாக நடப்பதற்கு ஒரு திகில் தான். காற்று பிச்சு வாங்கியது.
(காலையிலேயே அறையில் மின் குக்கரில் சாதம் சமைத்து வந்திருந்தோம். புளிக்காச்சல் சேர்த்து , சிப்ஸ் மற்றும் ப்ரூட்டியுடன் அங்கே தான் அமர்ந்து மதிய உணவு முடித்தோம்.)
ஒரு ”ப்ரஞ்ச் பியர்’ பெரியவர் மேலே ஏறி வந்தார். ஆனால் கதவைத்தாண்டி அந்த இரும்பு மேடையில் கால் வைக்கவில்லை. “ஹனி ஐ ம் கோயிங் டௌன்.. டோண்ட் டோண்ட் டச் மீ “ என்று அவரை நிறுத்த முயன்ற மனைவியை நோக்கி பரபரப்பாக பதில் சொல்லிவிட்டு கீழே இறங்க ஆரம்பித்துவிட்டார். அவர் முகம் மேலும் சிவந்து பயந்து போயிருந்தது. அவர் ஒழுங்காக இறங்கிப்போய்விடுவாரா என்று எனக்கு பயமாக இருந்தது. வெளியில் பார்க்கத்தான் அவருக்கு பயம் போல...
கடற்கரைக்குப் போகலாமா? இதோ இந்த நொடி கடற்கரை எப்படி இருக்கென்று கூட நீங்கள் பாக்கலாம். ஒரு சில இடங்களில் லைவ் கேமராக்கள் பொருத்தி இருக்கிறார்கள். இந்த இரண்டு இணைப்பிலும் நீங்கள் பார்க்கலாம். நமது நேரம் பகலில் பார்த்தால் கருப்பானத் திரையினைத் தான் பார்ப்பீர்கள்:) அமெரிக்க நேரத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கவும்.
cape may live cam
http://www.thesurfersview.com/index.php?option=com_content&view=article&id=200&Itemid=199
http://www.sunsetcam.com/cams/capemaycams.html
கடற்கரைக் காட்சிகள் இரண்டு . இந்தப் பாட்டு எவ்ளோ அழகு கேளுங்களேன்..காதல் ஜோடிகளாகப் போகாவிட்டாலும் போகிற வழியில் காதலை சந்திப்பார்களோ?
on the way to cape may
i fell in love with you
on the way to cape may
i saw my dreams come true